Saturday 8 October 2016

வயலும் வயிறும்

குளிர் சாதனத்தில் வாழ்கிறோம்
         அடுக்குமாடி கட்டிடத்தில் ஆடம்பரமாக
வயல்கள் வேண்டாம் வீடுகள் போதும்
         என நீ சொன்னாலும் - மனிதா

உணவு வேண்டாம், ஆடம்பர
         உறையுள் போதுமென
உன் உடல் சொல்லுமா

ஏர் பிடித்த விவசாயி தூக்கில் தொங்க
         கணனியில் எலி பிடிக்கும்
மனிதா, காசையும் பணத்தையும்
         உண்டு வாழும் காலத்தைக்
கற்பனை செய்து பார்.

Friday 7 October 2016

எ(செ)ம் மொழி


பொய்யா மொழியைத் தோற்றிய மொழி
நாம் செய்யாத் தவத்தின் வரமிம் மொழி

தமிழில் பிறந்த தமிழா
        நீ செய்வது எல்லாம் சரியா
தமிழ் மனைவி இருக்க
        ஆங்கிலக் காதலி ஏன்
நா சுழன்றால் நாகரீகம் என்றால்
        நா வறண்டால் என்ன செய்வாய்

வற்றும் நீரோடை தேடி
       வற்றா ஊற்றை அழிக்காதே
ஆங்கில உலகம் தேடித்
       தமிழை மறக்காதே

கல்லின் பின் தோன்றிய
       மண்ணின் முன் தோன்றிய
மூத்த குடியே - எம் தமிழே
       போற்ற வேண்டாம்
தூற்றாமல் காப்போம்.

Thursday 6 October 2016

வறட்சி



 எனது ஊரில் சூரியன் மிகவும் அழகு
வயல்வெளி கூட வாய் பிளந்து நிற்கிறதே